How To Watch Video Without Any ads YouTube Tricks


விளம்பர இடையூறின்றி யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி?

இணையத்தில் வீடியோ பார்க்க வேண்டும் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது யூடியூப் இணையத்தளம் தான். இது கூகுளால் நிருவகிக்கப்படும் உலகின் மிகப் பெரும் வீடியோ பகிர்வு தளமாகும்.

இதில் வீடியோ கோப்புக்களை பார்க்க முடிவது மட்டுமின்றி உலகளாவிய இணையப் பயனர்களுடன் வீடியோ கோப்புக்களை பகிர்ந்து கொள்ளவும், பணம் சம்பாதிக்கவும் கூட முடியும். மேலும் இதில் இல்லாத வீடியோ ஒன்றே இல்லை எனும் அளவுக்கு அனைத்து துறை சார்ந்த காணொளிகளும் இந்த இணையத்தளத்தில் பகிரப்படுகிறது.

உண்மையான யூட்யூப் தளத்தில் நாம் இளைஞர்களை பார்க்க கூடாது என்றால் பணம் செலுத்த வேண்டியிருக்கும்..இருந்த போதிலும் நாம் யூடியூப் இணையதளத்தின் ஊடாக காணொளிகளை பார்க்கும் போது அதில் இடைக்கிடையே விளம்பரங்கள் தோன்றுவதை நீங்கள் அவதானித்து இருக்கக்கூடும். அவ்வாறு விளம்பரங்கள் தோன்றுவதை நீங்கள் சங்கடமாகக் கருதினால் அவற்றை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் நீங்கள் காணலாம்.

யூடியூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றை நீங்கள் பார்க்க வேண்டும் எனின் அதனை நீங்கள் இலவசமாகவே பார்த்துக் கொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? எனினும் யூடியூப் ரெட் (YouTube Red) பற்றி நீங்கள் அறிவீர்களா? இது யூடியூப் தளத்தின் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய பதிப்பாகும். இவ்வாறு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் போது யூடியூப் தளத்தில் விளம்பரங்கள் காண்பிக்கப்பட மாட்டாது என்பதுடன் மேலும் பல வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.


விளம்பர இடையூறின்றி யூடியூப் வீடியோ பார்க்க உதவும் ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன்:
யூடியூப் வென்ஸ்ட் எனும் ஆண்ட்ராய்டு செயலியின் ஊடாக எந்த ஒரு யூடியூப் வீடியோவையும் விளம்பர இடையூறுகள் இன்றி கண்டுகளிக்கலாம். இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இது கூகுளால் வழங்கப்படும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான யூடியூப் செயலியோ அல்லது ஐபோன்களுக்கான யூடியூப் செயலியோ அல்ல)

யூடியூப் வென்ஸ்ட் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லை எனினும் கீழே வழங்கியுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் இதன் APK பைலை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் நிறுவிக் கொள்ளலாம். APK பைல் ஒன்றை ஆண்ட்ராய்டு போனில் நிறுவுவது எப்படி? என்பதை நாம் எமது முன்னைய பதிவுகள் ஊடாக பார்த்திருந்தோம்.

யூடியூப் வென்ஸ்ட் பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை நிறுவிய பின்னர் சாதாரணமாக யூடியூப் செயலியை பயன்படுத்துவது போன்றே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் விளம்பர இடையூறுகள் இருக்காது என்பதுடன் நீங்கள் பார்க்கும் வீடியோவின் இசையை பின்புலத்தில் (Background) கேட்க முடியும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
யூடியூப் வென்ஸ்ட் செயலியின் இடைமுகத்தை கருப்பு அல்லது வெள்ளை ஆகிய நிறங்களில் உங்களுக்கு விருப்பமான நிறத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

எனவே நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் யூடியூப் காணொளிகளை விளம்பர இடையூறின்றி பார்க்க விரும்பினால் யூடியூப் வென்ஸ்ட் (YouTube Vanced) எனும் இந்த ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்தித்தான் பாருங்களேன்!

APPS STORE

PLAY STORE 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url